வியாழன், 21 ஜனவரி, 2010

கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 11

7. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நடந்து கடைசியில் பாபர் மசூதியை இடிப்பதிலும் 2002 குஜராத் கலவரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் வகுப்புக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பவர்கள் மராட்டியப் பார்ப்பனர்கள்.
8. முக்கியமான 48 வகுப்பு மோதல்களில் 35 மகாராட்டிராவில் நடந்துள்ளன. சாதாரண இந்துக்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள மாதிரி தெரிந்தாலும், தீவிர விசாரணை செய்தால், இதில் பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மை வெளிவரும்.
9. அரசமைப்புச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட மக்களாட்சி அரசை இறக்கி விட்டு இந்து ராஷ்ட்ரம் எனும் பெயரில் பார்ப்பன ராஷ்டிரம் அமைத்திட நடைபெற்ற சதித்திட்டங்கள் மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது கூட, மகாராட்டிரத்தில் திட்டமிடப்பட்ட சதிதான்; சதியில் ஈடுபட்ட முக்கிய ஆளான லெப். கர்னல் சிறீகாந்த் புரோகித் மகாராட்டிரப் பார்ப்பனர்தான்.
10. நாட்டில் நடைபெற்ற பல பயங்கரச் செயல்களுக்கு ஊற்றுக் கண்ணாகவும் சதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கும் அபிநவ்பாரத் எனும் பயங்கரவாத இயக்கம் மகாராட்டிரத்தில் தோன்றியதுதான். அதன் தலைவராக பச்சைப் பார்ப்பனியவாதி ஹிமானி சவர்க்கார் என்பவர் வி.டி.சவர்க்காரின் சகோதரரின் மருமகள். இவரும் மகாராட்டிராக்காரரே.
11. 2008 ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அகமதாபாத் குண்டு வெடிப்பு, சூரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்தது போன்றவற்றிற்கும் மகாராட்டிரா மாநிலத் தொடர்பு உண்டு. குண்டுகள் வெடிப்பதற்குச் சில நிமிடங்கள் முன்பு தொலைக் காட்சிகளுக்கு அனுப்பப்பட்ட இ-மெயில் செய்திகள் புதிய மும்பையிலிருந்து அனுப்பப்பட்டன. இதற்குப் பயன்படுத்தப்பட்ட வண்டிகள் நவி மும்பையிலிருந்து திருடப்பட்டு தலசாரி வழியாகச் சென்றன. இந்த நகரம் மகாராட்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ளது. தணிக்கைச் சாவடியில், உள்ள கண்காணிப்புக் காமிராவில் ‘தில்லு முல்லு‘ செய்து விட்டு, மராத்தி செய்தித் தாள்களில் மூடி வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் எடுத்துக் செல்லப்பட்டிருக்கின்றன. ஆனாலும் கூட மகாராட்டிரப் பார்ப்பனியர்கள் இதனை மறைத்து விசாரணை செய்திட அய்.பி. உதவி செய்து முற்றிலும் எதிர்மறையான திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது.
12. டில்லியில் பட்லா ஹவுஸ் பகுதியில் நடந்த என்கவுண்டரில் தொடர்புடைய செல்பேசி சிம் கார்டுகள் மகாராட்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவுரங்காபாதில் உள்ள சிலருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கு இந்த சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கூட மிகவும் மேம்போக்கான விசாரணை நடத்தப்பட்டு சதிகாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஆழ்ந்த விசாரணை நடத்தப்பட்டால், பார்ப்பனியர்களுக்கு இருக்கும் தொடர்பு நிச்சயம் வெளிவரும்.
13. உத்தரப்பிரதேசம் கான்பூரில் 2008 ஆகஸ்டில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் மகாராட்டிராவுக்கு உள்ள தொடர்பு வெளிப்பட்டுள்ளது. வெடி குண்டுகளைத் தயாரித்த பஜ்ரங் தளத் தீவிர உறுப்பினர்களான ராஜிவ் மிஸ்ரா, பூபிந்தர்சிங் ஆகிய இருவர் வெடிகுண்டுகளைச் செய்து கொண்டு இருக்கும்போது இறந்துவிட்டனர். சிறுபான்மையர் பெருமளவில் வசிக்கும் பெரோசாபாத் பகுதியில் வெடி வைக்கத் திட்டமிட்டு இருந்ததாக விசாரணையின் மூலம் தெரிய வந்தது; மேலும், குண்டு வெடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மும்பையில் உள்ள இரண்டு செல்பேசிகளுடன் இவர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் யார் என்பதைக் காவல்துறை இன்னும் கண்டுபிடிக்க வில்லை. இதற்கு அய்.பி. ஆள்கள் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக இருந்திருக்கலாம்.
14. மும்பையில் 26.11.2008 இல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது சி.எஸ்.டி. நிலையத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய செல்பேசிகள் மகாராட்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவை யாருடைய பெயர்களில் இருந்தன என்பதைக் கண்டுபிடித்தால் பார்ப்பனிய அமைப்புகளை அடையாளம் காட்டிவிடும் என்பதால், இந்தச் சங்கதி அய்.பி. அயல் அப்படியே அமுக்கப் பட்டுவிட்டது; மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவும் (வெளிப்படையாகத் தெரிந்த காரணங்களுக்காக) சும்மா இருந்துள்ளது.
மேலே கண்ட சம்பவங்கள் எல்லாமே, சுருக்கமாக மகாராட்டிரத்தில் உள்ள பார்ப்பனிய அமைப்புகள், நாட்டில் வகுப்பு மோதல் சம்பவங்களைச் செய்து வருகின்றன என்பதைக் காட்டக்கூடியவை.
................................தொடரும்