பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டரில் மனித உரிமை மீறப்படவில்லை என்று தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்து விசாரணை செய்த தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையை புதன் கிழமையன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த என்கவுண்டரின் போது மனித உரிமை மீறப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.எங்கள் முன் தரப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்ந்ததில், காவல்துறையினரின் நடவடிக்கையின் போது மனித உரிமை மீறல்கள் இருந்ததாகக் கூற முடியவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் போலி என்கவுண்டர் என்று குற்றம் சாட்டிய அரசு சாரா பொதுநல அமைப்பு ஒன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்யுமாறு டில்லி உயர் நீதிமன்றம் தேசிய மனித உரிமை ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டரின் போது இருவர் கொல்லப்பட்டனர். காவல்துறையினருக்குள் நடைபெற்ற மோதலில் மோகன் சந்த் ஷர்மா என்ற காவல் ஆய்வாளரும் கொல்லப் பட்டார்.