வியாழன், 21 ஜனவரி, 2010
கர்கரேயைக் கொன்றது யார்?- நிறைவுப் பாகம்
கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 11
கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 10
செவ்வாய், 19 ஜனவரி, 2010
கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 9
முசுலிம் உள்துறை செயலாள-ருக்கு, அவர் அய்.பி.க்குத் தலைமை அதிகாரியாக இருந்த நிலையிலும் எந்தவித அறிக்கையையும் அனுப்பாமல் இருந்தார்கள் என்பதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். மத்திய உள்துறைச் செயலாளராக முதன் முதலில் நியமிக்கப்பட்ட முசுலிம் அதிகாரி, தம்மிடம் அய்.பி. எந்த அறிக்கையையும் கண்களில் காட்டுவதில்லை என்று புகாரே கூறினார்: அவர்-தான் அந்த அமைப்பின் தலைவராகக் கருதப்பட வேண்டிய உயர்நிலை அலுவலர் என்று காவல்துறை டைரக்டர் ஜெனரல் ஆக இருந்து ஓய்வு பெற்ற கே.எஸ். சுப்ரமணியம் முசுலிம் இந்தியா எனும் ஏட்டின் நவம்பர் 2008 இதழில் எழுதியிருந்தார்.
உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகம்மது சயீதை எப்படி நடத்தினார்கள் என்பது தெரியவில்லை. இவர்கள் அலட்சியப்படுத்தி இருக்க முடியாது. ஏனென்றால் அப்போதைய பிரதமரான வி.பி.சிங் அவர்கள் பார்ப்பனர்களின் ஜாதகத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தவர் என்பதால்.-அவர் ஆட்சிக் காலத்தில் அய்.பி. அடக்கி வாசித்திருக்கும்; ஆட்சி மாறினால்தான் விசை கொடுத்த பொம்மை போல திருப்பித் தாக்கலாம் என்ற நினைப்புடன்.அய்.பி.பொறியில் அரசுமராத்தி மாதமிருமுறை ஏடான ‘‘பகுஜன் சங்கர்ஷ்’’ (30-5-2008) இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது:
1990 இல் பதவி வகித்த பிரதமரும் உள்துறை அமைச்சரும் சில முக்கிய விசயங்களில் கமுக்கமாக விசாரணை செய்து, சிலரின் தொலைப் பேசிகளை ஒட்டுக் கேட்டு கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்ட காரணத்தினால், அய்.பி. பலம் பொருந்திய அமைப்பாகக் கருதிக் கொண்டு, பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போல அரசுக்கே கட்டளையிடவும் சில வேளைகளில் மிரட்டவும் தொடங்கிவிட்டது.
தங்களைப் போன்றே கொள்கை கொண்ட அதிகாரிகள் தொலைப் பேசித் துறையில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, இதே செயலைத் தொடர்ந்து செய்து அதனை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டுவிட்டனர். இதற்கான ஆணைகள் அரசிடமிருந்து பெறப்பட்டனவா என்பது தெரியவில்லை;
வேறொரு அமைப்பின் மூலம் அரசுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்கான வழி இல்லாத காரணத்தால் அய்.பி. சொல்வதையெல்லாம் முழு உண்மை என்றே எடுத்துக் கொள்ளவும் அதனைச் சரிபார்க்கவும் கூட வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. ஒருவகையில் இதனை, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த அமைப்பாக அரசு கருதுவதால் அது சர்வசக்தி உள்ளதாகஆகி, அரசின் ஏனைய முக்கிய அங்கங்களையும் பயன்படுத்தி பார்ப்பனியர்களின் செயல்களை நாட்டில் ஒருங்கிணைக்க ஏதுவாயிற்று. சுருங்கச் சொன்னால், பாகிஸ்தானின் அய்.எஸ்.அய். அமைப்பைப் போன்று தன் எஜமானனையே விழுங்கும் ஆயிரம் தலை நாகம் அளவுக்கு அய்.பி. நாட்டில் வளர்ந்து விட்டது.
ஊடகங்களின் பெரும்பான்மை மற்றும் அய்.பி. உளவுத்துறை ஆகிய இரண்டு வலுவான ஆயுதங்களைக் கொண்டு, மிகக் குறைந்த காலத்திற்குள்ளாகவே, ஆர்.எஸ்.எஸ். தன் கூரிய நகங்களை நாட்டின் குறுக்கும் நெடுக்குமாகப் பரப்பிப் பற்றிடச் செய்துவிட்டது. இன்றைய நிலையில் 30 ஆயிரம் நகரங்களில் 44ஆயிரம் (ஷாகா) கிளைகளைக் கொண்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. 70 முதல் 80 லட்சம் வரை இருக்கலாம்.
முழுக்கவும் தீங்கான நோக்கங்கள் கொண்ட ஆர்.எஸ்.-எஸ்.சுக்குக் கீழ்க்காணும் துணைஅமைப்புகள் இருக்கின்றன:
1. தள்_ போராடும் பிரிவு
4. ஏ.பி.வி.பி.- _ மாணவர் பிரிவு
கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 8
தொடர்ந்து ஆண்ட ஆட்சிகள் எல்லாம் தங்கள் அரசியலைக் கவனித்துக் கொண்டிருந்ததால், பார்ப்பனியர்கள் அய்.பி.அய்க் கைப்பற்றியுள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள மிகவும் தாமதம் ஆகி விட்டது. இந்தக் கால கட்டத்தில் அய்.பி. இறுக்கமான நடைமுறைகளைக் கொண்ட அமைப்பாக வளர்ந்து விட்டதால், அது முடிந்து போய்விட்ட விசயம் என்று அரசு சும்மா இருக்க வேண்டியதாகிவிட்டது. அய்.பி.இன் தலைமை அதிகாரியை அரசுதான் நியமிக்க உரிமை படைத்தது என்றாலும், நடைமுறையில் அதற்கான வாய்ப்பே இல்லை. பதவியிலிருந்து வெளிச் செல்லும் இயக்குநரே, தனக்குப் பின்னால் இன்னாரை நியமிக்கலாம் எனப் பரிந்துரைப்பதும் எந்தக் கேள்வியும் இல்லாமல் அரசு அதனை ஏற்றுக் கொள்வதும் நடைமுறையாகிவிட்டது. இரண்டே சந்தர்ப்பங்களைத் தவிர்த்து, மீதியெல்லாம் இதுவே நடைமுறையாகிவிட்டது.
இந்தியப் பிரதமர் தினமும் 15-20 நிமிடங்கள் அய்.பி. இயக்குநரிடம் செலவிட்டு, நாட்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள் குறித்தும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடியவை பற்றியும் கேட்டு அறிவார்; சமூக, அரசியல், இன, வகுப்புப் பிரச்சினைகள், சர்வதேச உளவுச் செய்திகள் போன்றவை இதில் அடங்கும். இதேபோல தினந்தோறும் அய்.பி. இயக்குநர், உள்துறை அமைச்சரிடமும் விளக்குவார். பாதுகாப்பு மற்றும் அயல் உறவுத் துறை பற்றிய செய்திகள் இருந்தால் அவை பற்றி அந்தந்த அமைச்சர்களிடையே விளக்குவார்.
2.பாதுகாப்பு கருதியும், நாட்டின் கவுரவம் காத்திடவும் பல செய்திகளை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், உயர்நிலை அதிகாரிகள், காவல்துறையின் உயர் நிலை அதிகாரிகள், நீதித் துறையினர் போன்றவர்களுக்கு அளிக்காமல் இருக்கும் செயலுக்குப் பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருக்கிறாற் போன்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
இத்தகைய நிலைமைகளின் காரணமாக, மத்திய மாநில அரசுகள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் போன்றோர் அய்.பி.இன் அறிவுரைகளை அணுவளவும் பிசகாமல், அது ஏதோ பிரதமரின் அலுவலகத்தினின்று வந்ததைப் போன்று கடைப்பிடிக்கின்றனர். அத்தகைய அறிவுரைகளின் நம்பகத் தன்மை குறித்து எந்தவித சந்தேகமும் கொள்ளாமல், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளாமலும் அப்படிச் செய்தால் ‘‘உச்ச ரகசியம்’’ கசிந்துவிடும் என்பதைப் போலக் கீழ்ப்படிகின்றார்கள். அப்படிச் செய்யாவிட்டால் தங்கள் மீது 1923 ஆம் ஆண்டின் ரகசியக் காப்புச் சட்டம் பாயும் என்று அஞ்சி அதன் நம்பகத்தன்மை பற்றிக் கவலைப்படுவதில்லை.
வெள்ளி, 15 ஜனவரி, 2010
கர்கரேயைக் கொன்றது யார்?- பாகம் 7
ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அய்.பி. அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டங்களை நேர்த்தியாக நிறை வேற்றி வருகிறது; ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசிய அமைப்பு எனும் பிரச்சாரத்தைச் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது. இடதுசாரிகள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் ஏற்படுத்துவோம் என்றும் முசுலிம்கள் மத அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்றும் உண்மையை மறைத்துப் பொய்யைப் பரப்புகிறவர்கள் என்னும் வாசகப்படி அவர்களின் எண்ணத்தை ஈடேற்றி வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சும், அய்.பி.யும் எந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதைக் கீழ்க் காணும் எடுத்துக்காட்டு மூலம் அறியலாம். நாடாளுமன்றக் கட்டடத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதி மன்றத்தாலும் விடுதலை செய்யப்பட்டுவிட்ட டில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, 22-.11-.2008 ஆம் நாளது தெகல்கா ஏட்டில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
இந்த உளவு நிறுவனத்தை மிக நெருக்கத்தில் இருந்து நான் பார்த்தேன். அவர்களுடன் அமர்ந்து இருந்தபோது ஓர் அரசு அலுவலகத்தில் இருப்பதாகவோ, ஒரு ஜனநாயக நாட்டில் வசிப்பதாகவோ என்னால் ஒரு போதும் நினைக்க முடியவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகத்தில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்.
அய்.பி.யோடு ராவை ஒப்பிட இயலாது
1. விடுதலை பெற்று 20 ஆண்டுகளுக்குப் பிறகு அன்றையப் பிரதமர் இந்தியா காந்தியால் ஏற்படுத்தப்பட்ட ரா அமைப்பு (RAW- ஆராய்ச்சி மற்றும் கூர்ந்தாய்வுப் பிரிவு) என்பதால், அய்.பி. போல அது பார்ப்பனிய மயமாக்கிட முயன்றும் முடியவில்லை. பார்ப்பனிய பாசம் பிடித்த அதிகாரிகள் பலர் இருந்தாலும் அவர்கள் தொடர்ந்து இதற்காக உழைக்க இயலாதவர்கள். எனவே அய்.பி. இல் உள்ளதைப் போன்று இதில் அவர்களால் சித்தாந்த ரீதியாக உள்ளே புகமுடியவில்லை.